புதன், 31 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -44

சங்கீத நினைவுகள் -2
சுப்புடு 

"இசை விமரிசனம் படிக்க இசையைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாவிட்டாலும், படித்துச் சிரித்து அனுபவிக்க ரஸனை இருந்தால் போதும் என்று அறிமுகம் செய்தவர் சுப்புடு. “ 
                                          எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் 
டொராண்டோவில் ஒரு திருப்புகழ் இசை வழிபாட்டில் எலெக்ட்ரானிக் ஆர்கன் வாசிக்கும் சுப்புடு வயலின் வித்வான் கரூர் சின்னஸ்வாமி அய்யர் மிகவும் கறார்ப் பேர்வழி. ராமகிருஷ்ண மடத்துக்காக நிதி திரட்ட முசிரி சுப்ரமண்ய அய்யர் இவரையும், தஞ்சாவூர் வைத்யநாதய்யர் அவர்களையும் தமக்குப் பக்கவாத்தியமாக அமைத்துக்கொண்டு பல கச்சேரிகள் செய்தார். அப்போதெல்லாம் மைக் கிடையாது. முசிரி அப்போதெல்லாம் மூன்று கட்டை சுருதியில் அலட்சியமாகப் பாடுவார். ரங்கூன் ஜூபிலி ஹாலில் எள்ளுப் போட்டால் விழாத கூட்டம். ஒருநாள் காம்போதி ராக ஆலாபனை பல்லவி விஸ்தாரத்துக்கு அமைந்தது. கந்தர்வ கானம் தான் போங்கள்! பல்லவிக்கு ‘நமக்கினி பயமேது, ஸ்ரீ ஷண்முகநாதன் துணையிருக்கும்போது’ எடுப்பு. அப்போதெல்லாம் பக்க வாத்யம் பக்க வாதமாகவோ பக்கா வாத்யமாகவோ இல்லாமல் உண்மையில் பக்க வாத்யமாகவே இருந்தது. துளி இடைஞ்சல் கிடையாது. கரூரார் அபரிமிதமான அனுசரணையுடன் வாசித்தார். மணி ஒன்பதரை ஆகிவிட்டது. நாலரை மணிக்கு ஆரம்பித்த கச்சேரி.


சீட்டுகள் அட்சதை மாதிரி குவிந்து கிடந்தன. உதார குணத்துக்கும் ரசிகர்களின் ஆதரவுக்கும் பெரு மதிப்பு கொடுக்கும் முசிரி சீட்டுகளை ஒன்றொன்றாய் எடுத்து நோக்க ஆரம்பித்தார். கறார் கரூரார் தம் தொங்கின பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார்.

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த புதுப்பணக்காரர் ஒருவர், “ஸ்வாமி, ரசிகாள் விரும்பறா! நீங்கள் மணியைப் பார்க்கக் கூடாது” என்றார் அலட்சியமாக. சபையும் சற்றே சலசலப்பு கண்டது.

கட்டை விரலில் ஆள்காட்டி விரலை வைத்துச் சுண்டி, “நீங்களும் மணி ( Money ) யைப் பார்க்கக் கூடாது ! “ என்றார் கரூரார். இரவு “தேயிலைத் தோட்டத்திலே” போய்ச் சேரும்போது மணி பதினொன்று.


[ நன்றி: தினமணி கதிர் ]

வியாழன், 25 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -43

சங்கீத நினைவுகள் -1 
சுப்புடு 

பிரபல இசை, நாட்டிய விமர்சகர்   சுப்புடுவின் விமர்சனங்களையும், அவற்றின் தொகுப்பாக வந்த சில நூல்களையும் பலர் படித்திருப்பார்கள்.

இதோ அவருடைய நூல் ஒன்றின் அட்டைப் படமும், அவருடைய முன்னுரையும் :

அவருடைய விமரிசனங்கள் பலவற்றின் படிகளைச் சுப்புடு அவர்கள் 94-இல் டொராண்டோ வந்தபோது அவருக்குக் கொடுத்தவன் நான்தான். ( ஆனால் நூல் வெளியிடும் போது, என் பெயரை மறந்து, அதை மாற்றி ”பாலசுப்பிரமணியம்” என்று எழுதிவிட்டார்! அது போகட்டும்! )

94-இல் டொராண்டோவில் சுப்புடு தம்பதியர்


அவருக்கு நான் கொடுத்தவை தவிர மேலும் சில கட்டுரைகள் என்னிடம் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். அவற்றுள் சிலவற்றை, முடிந்தவரை சில மூல படங்களுடன்  இந்தத் தொடரில்... அவ்வப்போது .... இட எண்ணுகிறேன்.  இதோ முதல் கட்டுரையின் முதல் பகுதி !

அவருடைய நகைச்சுவை உணர்வை இதில் ரசிக்கலாம்!

அவர்களின்  நலனைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கூட கல்கத்தாவில் போலீஸ்காரர்கள் அசெம்பிளியில் புகுந்து அட்டகாசம் செய்தார்கள். கேள்வி கேட்பார் இல்லை. ஏகத் திருட்டு. இரண்டு நாள் முன்னால் கோல் மார்க்கெட்டில்  பட்டப் பகலில் அவ்வளவும் கொள்ளை போய்விட்டது. கேள்வி கேட்பார் இல்லை.அந்தக் காலத்தில் கோல் மார்க்கெட்டில்  வீட்டைத் திறந்துவிட்டுப் போகலாம். அப்போதெல்லாம் டெல்லியில் வீட்டுக் கஷ்டம் கிடையாது. டெல்லியில் உள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஆறு மாதம் சிம்லா போகும்போது அவர்களுடைய டில்லி வீடு பூட்டிக் கிடக்கும். யாராவது இருந்து விளக்கேற்றினால் போதும் என்று கெஞ்சுவார்கள். வீட்டு வாசலிலேயே எருமையைக் கொண்டு வந்து கறப்பான். ரூபாய்க்குப் பதினாறு படி. ஒரு எருமை இரண்டாயிரம் பெறும். கீழே பெரிய வாளியைக் கொண்டு வைத்து கறப்பான். சொட்டு தண்ணீர் விடமாட்டான் . . .  . .  "

போதுமா? எங்கேயோ ஆரம்பித்து எருமை மாடு வரை வந்து விடுவார்!

[ நன்றி: தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்: 
சுப்புடு
சங்கீத சங்கதிகள் : கட்டுரைகள்

புதன், 24 டிசம்பர், 2014

பதிவுகளின் தொகுப்பு: 251 – 275

பதிவுகளின் தொகுப்பு: 251 – 275251. பதிவுகளின் தொகுப்பு: 226 – 250

252. ஆனந்த சிங்: மாயக் களவு -1

253. ஆனந்த சிங்: மாயக் களவு -2

254. ஆனந்த சிங்: மாயக் களவு -3

255. ஆனந்த சிங்: மாயக் களவு -4

256. தென்னாட்டுச் செல்வங்கள் – 11
கங்கை கொண்ட சோழபுரம் -1

257. தேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்

258. தென்னாட்டுச் செல்வங்கள் – 12
கங்கை கொண்ட சோழபுரம் -2

259. சுதந்திர விகடன்

260. தென்னாட்டுச் செல்வங்கள் – 13
கங்கை கொண்ட சோழபுரம் -3

261. பாடலும் படமும் – 7
பிள்ளையார் சிந்தனை

262. தென்னாட்டுச் செல்வங்கள் – 14
கங்கை கொண்ட சோழபுரம் -4

263. தேவன் -19 : இதென்ன உபசாரம் ?

264. பி.ஸ்ரீ. -9: பாரதி விஜயம் -1

265. சங்கீத சங்கதிகள் – 39
இசைக்கு ஒரு ராணி! -- டி.டி.கிருஷ்ணமாச்சாரி

266. தென்னாட்டுச் செல்வங்கள் - 15
கங்கை கொண்ட சோழபுரம் -5

267. பாடலும் படமும் - 8 :அபிராமி அந்தாதி -2

268. தென்னாட்டுச் செல்வங்கள் - 16
கங்கை கொண்ட சோழபுரம் -6

269. சங்கீத சங்கதிகள் - 40
சிவனின் தீபாவளிப் பாடல்கள்   

270. கவிதை எனக்கோர் ஆனந்தம் ! :

271. முல்லைத் திணை வாசன் :கவிதை

272. கவிஞர் சுரபி – 1

273. சாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்

274. கல்கி - 6 : மாணிக்கத்தை இழந்தோம்

275. ராஜாஜி – 1


 தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 18 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -42

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -2

முந்தைய பதிவு 

சீசன் 55 -1

' ஆடல் ‘ என்று தலைப்பில் இருக்கும்போது, நாட்டியக் கச்சேரிகளைப் பற்றி 

எழுதித்தானே ஆகவேண்டும்?  
55- சீஸனில் நடந்த நாட்டியக் கச்சேரிகளைப் பற்றி ‘விகடனில்’ வந்த 

 இரண்டாம் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ! 

சில பெயர்களை உதிர்க்கிறேன்....ருக்மிணி தேவி, கமலா லக்ஷ்மண், 

லலிதா பத்மினி, பாலசரஸ்வதி , மிருணாளினி சாராபாய், மார்த்தா 

கிரஹாம் .... எதற்கு? நீங்களே படியுங்கள்!

[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1  சீஸன் 53: 2  சீஸன் 53 : 3

சீஸன் 54: 1  சீஸன் 54: 2  
சீசன் 54-3

சீஸன் 55-1  சீஸன் 55-2

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்

திங்கள், 15 டிசம்பர், 2014

ஸர்தார் வல்லபாய் படேல்

சுதந்திர இதிகாசத்தில் ஒரு கதை 

டிசம்பர் 15, 1950. 
ஸர்தார் வல்லபாய் படேல் மறைந்த தினம்.


 ‘ஆனந்த விகடன்’ அடுத்த இதழில் வெளியிட்ட கட்டுரை இதோ![ நன்றி : விகடன் ]

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -41

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -1 எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட  மகாராஜபுரத்தின் மோகன ராகம். 

பிரமாதமாய் அமைந்த ஜி.என்.பி யின் புதுவருஷக் கச்சேரி. 

எம்.எஸ்ஸின் சாரீர வன்மையின் சிறப்பு. 

அன்னபூர்ணா ரவிசங்கர் தம்பதியின் கச்சேரி. 

அமிர்தமாய்த் தமிழிசை பொழிந்த அரியக்குடி.

கோகலே ஹாலில் ’மதுர’ கீத மதுரை மணி.

வியவஹார சங்கீதம் வழங்கிய ஆலத்தூர் சகோதரர்கள். 

மூன்று ஸ்தாயிகளில் பாடிய மணக்கால் ரங்கராஜன்.


இவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா? 

மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்த 

சீஸன்.


1955 - சீஸன். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்.  


ஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், 

சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , 

கட்டுரைகளும்  வரும். விகடனில் 1955 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ! 


( தொடரும்) 

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1

சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீஸன் 54: 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்

வியாழன், 11 டிசம்பர், 2014

பி.ஸ்ரீ. -10: பாரதி விஜயம் -2

விருந்தும் மறுவிருந்தும் 

பி.ஸ்ரீ 


பாரதி விஜயம்’ என்ற சிறுதொடரைக் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கிய புதிதில் ... 41-43- வாக்கில் ... தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆசார்யா எழுதியதைப் பற்றி முன்பே குறிப்பிட்டேன் அல்லவா? 

இன்று ..டிசம்பர் 11. பாரதியார் பிறந்த தினம். 

அவர் நினைவில், அத்தொடரின் முதல் கட்டுரையை இங்கிடுகிறேன். 
( இது இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு எழுதப் பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.) [ நன்றி : கல்கி ] 

தொடர்புள்ள பதிவுகள்:புதன், 10 டிசம்பர், 2014

ராஜாஜி - 1

ராஜாஜி 

சாவி

டிசம்பர் 10. ராஜாஜியின் பிறந்த தினம்.
அவர் நினைவில், இதோ  ஒரு கவிதையும், ஒரு கட்டுரையும் .

நாமக்கல் கவிஞரின் கவிதை 50-களில் ‘கல்கி’யில் வந்தது. ‘சாவி’யின் கட்டுரை  அவர் அப்போது ஆசிரியராக இருந்த ‘தினமணி கதி’ரில் ராஜாஜி மறைந்தபின் வந்தது.


[ நன்றி : கல்கி, தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:

’கல்கி’ பற்றி ராஜாஜி

’பாரதி’ பற்றி ராஜாஜி

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கல்கி - 6 : மாணிக்கத்தை இழந்தோம்

மாணிக்கத்தை இழந்தோம்

ராஜாஜி 


டிசம்பர் 5.  பேராசிரியர் ‘கல்கி’யின் நினைவு தினம்.

டிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த  ‘கல்கி’ இதழ்  பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய பல அஞ்சலிக் கட்டுரைகளைத்  தாங்கி நின்றது. 

 அவற்றிலிருந்து  ஒன்று இதோ! 

ராஜாஜி  ஒருவரே சொல்லக் கூடியதான சில வாக்கியங்கள் இதில் உள்ளன என்று “சுந்தா” தன் “பொன்னியின் புதல்வர்”  நூலில் எழுதியிருக்கிறார். 

கல்கியின் ஈமக் கிரியைகள் முடிந்ததும், மயானத்தின் இன்னொரு பக்கம் இரங்கற் கூட்டம். ம.பொ.சி தலைமை. ராஜாஜி துக்கம் சொல்லொணாதது என்று சொல்லிப் பேச மறுத்து விட்டார். பிறகு பிற்பகலில் ரேடியோ பிரதிநிதியாய் மீ.ப. சோமு கேட்டதின் பேரில், தன் உரையை ஒலிப்பதிவு செய்து கொடுத்தார். அதுவே இந்தக் கட்டுரை. அதற்குப் பின் ரேடியோவில் ம.பொ.சியின் உருக்கமான அஞ்சலி. ( என் வலைப்பூவில் அதுவும் இருக்கிறது...)பின்னூட்டங்கள்:
 

அரசி :

ராஜாஜியின் நறுக்குத் தெறித்த நடையில்--ஒரு சீடனை, நண்பனை, அபிமானியை இழந்த சோகம் இழைந்தாலும், துறவித்தன்மையும் ஊடு பாய்கிறது...

பொன்பைரவி:


செய்யுளுக்கு உரிய எதுகை மோனை இவற்றை வசனத்தில் அடுக்க மாட்டார் .இது ஆணுக்கு பெண் வேஷம் போடுவது போன்றது.
ராஜாஜியின் இந்தக் கருத்து அது வெளியிடப்பட்ட கால கட்டத்தின் பின்னணியில் வைத்துச் சிந்திக்கப்பட வேண்டியது . கல்கியின் எழுத்து நடையை இதை விடச் சுருக்கமாக யாரும் ஆராய்ந்து விட முடியாது.

தொடர்புள்ள சில பதிவுகள்: 

அந்தக் ‘கல்கி’  இதழில் வந்த :

மீ.ப.சோமுவின் தலையங்கம் 

ம.பொ.சி யின் அஞ்சலிக் கட்டுரை

’தேவனி’ன் அஞ்சலிக் கட்டுரை

கொத்தமங்கலம் சுப்புவின் அஞ்சலிக் கவிதை

அந்த வார ‘விகடனில்’ வந்த

எஸ்.எஸ்.வாசனின் கட்டுரை

'கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . . ஞாயிறு, 30 நவம்பர், 2014

சாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்

'அப்பச்சி' அருணாசலம்
சாவி


'யாருங்கறேன் அது? கானாடுகாத்தான் கருப்பய்யாச் செட்டியாரா? வாங்க, இருங்க. மெட்ராசுக்கு எப்ப வந்தீக? உங்க அப்பச்சி எப்படி இருக்காக? பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டியார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே? ஏங்கறேன்... என்ன செலவாகியிருக்கும்? வாணத்தைக் கொளுத்தி வானத்திலே விட்டாகளாமே!


ஊம்... பையனைச் சீமைக்கு அனுப்பி படிக்க வெச்சாகளாம். அவன் திரும்பி வந்து சிகரெட்டு புடிக்கிறானாம். ஏங்கறேன்... இதைக் கத்துக்க சீமைக்கா போகணும்?

காத்துலே பறக்குமே, அதென்னங்கறேன், ஏரோப்ளான்! அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம்? ஏம் போக மாட்டாக? அவுக பரம்பரையா மலேயாவிலே வட்டி வியாபாரம் செஞ்சு, லெச்சம் லெச்சமாகக் குவிச்சு வெச்சிருக்காக. நமக்கு முடியுமாங்கறேன்? என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக்கீக? நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம்? அதைச் சொன்னா நம்ம மகன் கேக்கறானில்லே...''

அப்பச்சி அருணாசலம் செட்டியார் தமது கைக் கோலால் தரையைத் தட்டிக் கொண்டே, அந்த பங்களாவின் வராந்தாவிலுள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தம் மகனைப் பற்றி இப்படி ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்.

''ஏன்? உங்க மகனுக்கென்ன? நல்லாத்தானே பிசினஸூ பண் ணிக்கிட்டிருக்காக?'' என்பார் ஆனா மூனா கானா.

''என்னங்கறேன் நீங்க ஒண்ணு! உங்களுக்குத் தெரியாதா? தேவ கோட்டையிலே கப்பலாச்சும் வீடு. இருக்கிற சொத்தை வெச்சு இன்னும் நாலு தலைமுறைக்கு கால் மேலே கால் போட்டுச் சாப்பிடலாம். இந்த மெட்ராசுலே நமக்கு என்னய்யா வேலை? கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்கறானா? இவனுக்கெதுக்குங்கறேன் இந்த வேலையெல்லாம்?

ஒரு லெச்சம் செலவளிச்சு இந்த பங்களாவைக் கட்டியிருக்கான். நமக்கெதுக்கு இந்தப் பட்டணத்திலே பங்களாவும் காரும்? ஊரிலே கோட்டை மாதிரி வீட்டைப் பூட்டி வெச்சிருக்கோம். கட்டி அணைக்க முடியாதுங்கறேன் ஒவ்வொரு கம்பமும். என்னங்கறேன்... உங்களுக்குத் தெரியாததா?

அதையெல்லாம் விட்டுப் போட்டு மெட்ராசுலே பிசுனஸூ பண்றானாம்! சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கணும்? அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம்! அது சும்மாவா இருக்குது? ரொட்டியைக் கொண்டாங்குது! மட்டனைக் கொண்டாங்குது! சும்மா இருக்குற நேரத்துலே என்னைப் பார்த்து உர் உர்ருங்குது. சரி, போவட்டும்; இவ்வளவு பெரிய தோட்டம் எதுக்குங்கறேன்? தோட்டம்னா சும்மாவா? தோட்டக்காரனுவ நாலு பேரு. இவனுக என்ன பண்றானுவ? ஒரு கத்திரிச் செடி உண்டா? ஒரு வெண்டைச் செடி உண்டா? எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்கறேன்? அந்தப் பூ எதுக்கு ஒதவும்? சொல்லுங்கறேன்.

என்ன, ஆனா மூனா கானா? என்ன பேசாம இருக்கீக? குளந்தைகளுக்கு ஒரு திருவாசகம், ஒரு தேவாரம் தெரியுமா? எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டாமில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாகளய்யா! நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச்சோம்? அதனாலே இப்ப என்னங்கறேன், கெட்டாப் போயிட்டோம்? இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை? போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக்கிறதுதானே'ம்பாக இல்லையா?''

[ நன்றி : விகடன், ஓவியம்: கோபுலு ]

பின் குறிப்பு: சாவியின் ‘ கேரக்டர்’ நூலில் இந்தக் கட்டுரை இல்லை என்று நினைக்கிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:
சாவி: படைப்புகள்
'

வெள்ளி, 14 நவம்பர், 2014

கவிஞர் சுரபி - 1

நேரு எங்கள் மேரு 
‘சுரபி’ 

14 நவம்பர்.  

நேரு பிறந்த தினம். அவர் நினைவில் , ‘விகடனில்’ 50-களில் வெளிவந்த ஒரு கவிதையை இடுகிறேன். இதை இயற்றியவர் கவிஞர் ‘சுரபி’: தங்கவேலு என்பது அவர் இயற்பெயர்.  தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார்.  ( அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கிட்டவில்லை; அறிந்தோர் எழுதலாம்.)[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

’சுரபி’ : கவிதைகள்

புதன், 5 நவம்பர், 2014

முல்லைத் திணை வாசன் :கவிதை


முல்லைத் திணை வாசன்

பசுபதி

அம்மன் தரிசனம்’ 2005 தீபாவளி மலரிலும், ‘ ஷண்முக கவசம்’ 2014 மலரிலும் வந்த கவிதை. 
கண்ணன் புகழ்சொல்லிக் கும்மியடி! -- வளைக்
. கைகள் குலுங்கிடக் கும்மியடி !
வண்ண மயிலிற காடிவரும் -- அவன்
. மாண்பினைப் பாடியே கும்மியடி !பாரதம் போற்றிடும் ஏகனடி! -- அவன்
. பார்த்தனின் தேருக்குப் பாகனடி!
நாரண பூர்ணாவ தாரனடி! -- கோதை
. நாச்சியார் நெஞ்சுறை சோரனடி!        (கண்ணன்)

இருவர்க்குச் சேயான கண்ணனடி! -- கருணை
. ஈரக் கருமுகில் வண்ணனடி!
குருகுலப் பாண்டவர் நண்பனடி! --ஏழைக்
. குசேலர்க் கருள்செய்த பண்பனடி!        (கண்ணன்)

மாமலை தூக்கிய பாலனடி! -- தன்
. மாமன் கொடுமைக்குக் காலனடி!
நால்மூவர் பாடிய சீலனடி ! -- ஸ்ரீ
. நாதனடி அவன் போதனடி!              (கண்ணன்)

சங்கத் தமிழரின் மாயவன்டி! -- வேத
. சாரமாம் கீதையின் நாயகன்டி !
நங்கைநப் பின்னை மணாளனடி! -- கோபன்
. நந்தன் மனம்மகிழ் ஆயனடி!             (கண்ணன்)

முல்லைத் திணையதன் வாசனடி! -- அவன்
. மோகனப் புன்னகை ஈசனடி!
புல்லாங் குழலிசை கேசவன்டி! -- அவன்
. பூதேவி சீதேவி நேசனடி !              (கண்ணன்)


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவு :

கவிதைகள்