வியாழன், 24 ஏப்ரல், 2014

குறும்பா - 4,5,6 : தீ, திருடன், சிறுத்தை

தீ, திருடன், சிறுத்தை
பசுபதி

4. தீ


பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான்,
பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் !
. . . மஞ்சத்தில் ராசாத்-தீ !
. . . வாட்டியது  காமத்-தீ  !
வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் !

*****

5. திருடன்



கன்னமிட்டான் காரிருளில் நம்பி

தந்திரமாய் ஜன்னல்கம்பி நெம்பி !
. . . குடியிருந்தவன் போலீசு !
. . . தடியெடுத்தவன் 'விளாசு' !
இன்றுநம்பி எண்ணுகிறான் கம்பி !

*****

6. சிறுத்தை 

சிரித்தபடி செல்கின்றாள் வீரி
சிறுத்தையதன் முதுகில்ச வாரி !
. . . திரும்பி னார்கள் சேரி ,
. . . சிறுத்தை வயிற்றில் நாரி ;
விரிந்தபுலி முகத்தில்நகை மாரி !

அல்லது

சிரித்தபடி செல்கின்றாள் வீரி

சிறுத்தையதன் மேலவள்ச வாரி !

. . . திரும்புகின்ற வழிதனிலே

. . . சிறுமிபுலி வயிற்றினிலே

சிறுத்தை முகத்தில்நகை மாரி 



(மூலம்: ஓர் ஆங்கில லிமெரிக் :
There was a young lady of Niger
Who smiled as she rode on a tiger;
They returned from the ride
With the lady inside,
And the smile on the face of the tiger )


தொடர்புள்ள பதிவுகள்: 
குறும்பா - 1
குறும்பா - 2, 3

குறும்பாக்கள்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கவிதை அருமையாக உள்ளது.... ரசித்தேன்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என் வருகைதொடரும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Pas S. Pasupathy சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ரூபன்.

இராய செல்லப்பா சொன்னது…

அசத்துகிறீர்கள் அண்ணா! இன்னும் நிறைய எழுதுங்கள். கடைசி ஓவர்களில் பேட்ஸ்மேன் சிக்சர்களாக அல்லவா அடிக்கவேண்டும்? சிங்கிள்களாக அடிப்பது நியாயமா? - இராய செல்லப்பா (http://chellappatamildiary.blogspot.com)