சனி, 19 ஆகஸ்ட், 2017

810. கு.ப.ராஜகோபாலன் - 2

செட்டிமார் நாட்டிலே
கு.ப.ராஜகோபாலன்


‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. ( அவருடைய சிறுகதைகளைத் தான் பலரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ) 
தொடர்புள்ள பதிவுகள்:
கு.ப.ராஜகோபாலன்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

809. சத்தியமூர்த்தி - 2

ஒழிவு நேர உல்லாஸ வேலை
எஸ்.சத்தியமூர்த்தி 

ஆகஸ்ட் 19. எஸ். சத்தியமூர்த்தியின் பிறந்த தினம்.


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

808. சங்கீத சங்கதிகள் - 131

ஸ்ரீ பூச்சி ஐயங்கார் ஸாஹித்யங்கள் - 1
அரியக்குடி ராமனுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 

ஆகஸ்ட் 16.  ராமநாதபுரம் ( பூச்சி ) ஐயங்காரின் பிறந்த தினம்.


‘ சுதேசமித்திர’னில் 1946 -இல் வந்த மூன்று கட்டுரைகள். 
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

புதன், 16 ஆகஸ்ட், 2017

807.சுதந்திர தினம் -2

சுதந்திர மலர் -1 
15 ஆகஸ்ட் 1947.
‘சக்தி’ இதழின் ஆகஸ்ட், 1947 மலரிலிருந்து  ஒரு கதம்பம்.தொடர்புள்ள பதிவு :

சுதந்திர தினம்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

806. ந.பிச்சமூர்த்தி - 2

நல்ல வீடு
ந.பிச்சமூர்த்தி 


ஆகஸ்ட் 15. பிச்சமூர்த்தியின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கதை இதோ.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ந.பிச்சமூர்த்தி

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

805. பாடலும் படமும் - 20

கண்ணன் பிறப்பு 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்


பண்ணை இசைப்பீர் – நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு 

         
                 --- பாரதி ----


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

804. எச்.ஜி.வெல்ஸ் -1

பேரறிஞர் வெல்ஸ்
பாகோ

ஆகஸ்ட் 13.  எச்.ஜி.வெல்ஸ்ஸின் நினைவு தினம்.

‘சக்தி’ இதழில் 1946-இல் , அவர் மறைவுக்குப் பின், வந்த ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்:
எச். ஜி. வெல்ஸ் ; விக்கிப்பீடியா

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

803. கவி கா.மு.ஷெரீப் - 3

”தமிழ் முழக்கம்” கவி கா.மு.ஷெரீப்
கலைமாமணி விக்கிரமன் 

ஆகஸ்ட் 11கவி கா.மு.ஷெரீப்பின் பிறந்த தினம்.கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகாமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.


“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.


முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் சேவையைப் போற்றி பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.


கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். “எனக்கென எஞ்சி நின்றவை — புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று” என்றும், “புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது. கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

“சீறாப்புராணம்” சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்” என்று கி.ஆ.பெ. புகழ்ந்துள்ளார்.

“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக” என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் “சந்திரோதயம்” என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். ‘அன்னையா? கன்னியா?’ என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் ‘சாட்டை’ இதழில் எழுதினார். ”தமிழில் பிறமொழிச் சொற்கள்” என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் ‘தமிழ் முரசு’ என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் “தமிழகக் களக்கவிஞர் ” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில் ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

“மாயாவதி” என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். ‘பெண் தெய்வம்’, ‘புது யுகம்’ ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை ‘மச்சகந்தி’ என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கவி கா.மு.ஷெரீப்

802. சிறுவர் மலர் - 5

மரியாதை ராமன் கதை 
ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்களை வலையில் படிக்கலாம்!

என்னிடம் உள்ள ஒரு பழைய படக்கதையை இடுகிறேன். இது ‘சுதேசமித்திர’னில் 1937 -இல் வந்த ஒரு தொடர்.  பலருக்கும் தெரிந்த ‘மரியாதை ராமன்’ கதைகள் அங்கே தொடர்ந்து வந்தன. ஓவியர்: கே.ஆர்.சர்மா ( இவர் விகடனின் தொடக்க காலத்தில் அங்கே இருந்திருக்கிறார். என் வலைப்பூவிலும் அவர் 1932-இல் வரைந்த   சார்லி சாப்ளின் படம் உள்ளது!)

மரியாதை ராமன் கதைகளில் எல்லாக் கதைகளும் சிறுவர்க்கேற்றவை என்று நான் சொல்லமாட்டேன்!  ஏற்ற ஒரு கதைப்படத்தை மட்டும் இங்கே இடுகிறேன். ( கதை தெரியாதவர்கள் இங்கே  படிக்கவும் ! -- ஆம், படங்களை மட்டும் படித்தால் கதையை நன்றாய்ப் புரிந்துகொள்ளல் கடினம் தான்!)

இருப்பினும், அந்தப் படக்கதைத் தொடர்..... 1937 -இலேயே இப்படி வந்தது ...என்று அறிந்து கொண்டு அந்த முன்னோடிப் பத்திரிகையையும் , ஓவியரையும் நாம் கௌரவிக்கவேண்டாமா?)  ( இதற்குப் பின் 1938-இல் ”ராயர் அப்பாஜி கதைகள்” என்ற படத் தொடரும் வந்தது ! பிறகு ஒரு நாள் ஒரு மாதிரியை இடுகிறேன்!)

இதோ ஒரு ‘மரியாதை ராமன்’ கதை ![ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்

பின் குறிப்பு:
1937-இல் பிரபல   பிரிட்டிஷ்  வார காமிக்ஸ்  இதழ் ‘டேண்டி’ ( Dandy ) 
தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


801. பி.ஸ்ரீ. - 20

மெய்விளங்கிய அன்பர்கள் : 
சேக்கிழார் பிறந்த நாடு : சேக்கிழாரும் அரசு முறையும்
பி.ஸ்ரீ.


1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து ஒரு கட்டுரையின் முதல் பக்கம் ! ( மற்ற பக்கங்கள் கிட்டவில்லை.) 


இன்னொரு முழுக் கட்டுரை! 


[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

800. கவிஞர் சுரபி - 4

சக்தி பிறக்குது 
“சுரபி” 


’சக்தி’ சுதந்திர மலரில்  ( ஆகஸ்ட் 1947)  கவிஞர் சுரபி ( ஜே.தங்கவேலு ) எழுதிய பாடல்.தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 9 ஆகஸ்ட், 2017

799. பாடலும் படமும் - 19

சந்திரன் [ ஓவியம் : எஸ்.ராஜம் ] 
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் 
வங்கண் உலகளித்த லான்'   - சிலப்பதிகாரம் 

ஒவியத்தில் சதுரமான பீடத்தின்மேல் அமைந்த ஆசனத்தில் சந்திரமூர்த்தி வீற்றிருக்கிறான். அந்தப் பீடம் உள்ள தேர், இரண்டு சக்கரங்களும் பத்துக் குதிரைகளும் உடையதாக இருக்கிறது. கையிலே வெள்ளை அல்லியை எந்தி, உடம்பெல்லாம் அணிகள் அணிந்து, பன்னிற மாலை வேய்ந்து, முடி புனைந்து விளங்குகிறான் மதிக்கடவுள். தண்மையும் மென்மையும் அமைதியும் உருவாக விளங்கும் அவனுடைய திருமுக மண்டலத்துக்குப் பின் ஒளி வட்டம் ஒளிர்கிறது. வெண்குடை, இடத்தே ஓங்கி நிற்க, அதன் மேல் சிங்கக் கொடி பறக்கிறது. கர்க்கடக ராசிக்கு உடையவன் இவன் என்பதை அருகில் உள்ள நண்டு குறிக்கிறது.

சந்திரனை அடுத்து ரோகிணி இருக்கிறாள். அவளருகே உள்ள நட்சத்திரம் அவள் நட்சத்திர மங்கை என்று காட்டுகிறது. சந்திரனின் அதிதேவதையாகிய நீர், இங்கே நீர்மகளாக நீர்ப்பரப்பின்மேல் தோற்று கிறாள். அவனது இடப்புறத்தே பிரத்தியதி தேவதையாகிய கெளரி, குழற் கோலம் திகழ வீற்றிருக்கிருள். பின்னே மேருமலை, நிழல்போலத் தோன்றுகிறது. சந்திரன் நிசாகரன் ஆதலின் இரவின் கருமையையே நிலைக்களமாக வைத்து, ஒவியர் இதைத் தீட்டியிருக்கிறார். முகிற்கணம் சிதறிய வானத்தையும் அந்த நிலைக்களத்திலே காண்கிறோம்.

எல்லாம் எழில் உருவாக அமைய, இடையே அமுத எழில் பொங்க, அருளொழுகு கண்ணும் சாந்தம் மலரும் முகமும் உடைய வெண்மதித் தேவன் வீற்றிருப்பது இனிய காட்சி.

தண்ணென் நிலவால் சராசரத்துக் கின்புதவிக் 
கண்ணெகிழும் பூங்குவளை கட்டவிழ்த்து-விண்ணவர்கள் 
ஆரமுதம் உண்ண அருளோ டொளிபரப்பிச் 
சீருறுவான் திங்கட்புத் தேள்,
                             --- கி.வா.ஜகந்நாதன் ----

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

798. தாகூர் - 2

ஸ்ரீ ரவீந்திர நாதர்
கு.ப.ராஜகோபாலன்

ஆகஸ்ட் 7. தாகூரின் நினைவு தினம்.’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை .


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
தாகூர்